
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தையும் இன்று இரவு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் ஏற்கனவே நடத்தப்பட்ட வரும் குட்கா சோதனைகளில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் ஆலோசனை செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக இன்று இரவு 7 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக சிலை கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைதொடர்ந்து பிரதமர் மோடியை வரும் 8ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.