Published : 05,Oct 2018 01:13 AM

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

Schools-are-declared-holiday-today-in-Chennai-due-to-rains

சென்னை மாநகர் முழுவதும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 7-ஆம் தேதி தமிழகத்தில் அதீத கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.அக்டோபர் 7-ஆம் தேதி 25 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அபாயகரமான இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்