நடிகை காஜல் அகர்வால் மலைப்பாம்பை தோளில் சுமந்து கொண்டு தைரியமாக வலம் வந்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
இயக்குநர் தேஜாவின் படப்பிடிப்புக்காக நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தாய்லாந்த் சென்றிருந்தார். அங்கே காட்டுப் பகுதி ஒன்றில் இவரது படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்தப் படம் காட்டுப் பகுதியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வருதால் அடர்ந்த வனங்களை தேடித்தேடி படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு.
அப்போது தாய்லாந்திலுள்ள இயற்கை அழகு சூழ்ந்த நக்ஹோன் பதம் பகுதியில் ஒரு மலைப்பாம்பை தன் தோளின் மீது எடுத்துப் போட்டு வலம் வந்துள்ளார் காஜல். அவரிடம் இந்தப் பாம்பு அனுபவம் பற்றி ஒருவர் ‘எப்படி உள்ளது இந்த அனுபவம்?’ என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு காஜல், “நான் இதை மிகவும் விரும்புகிறேன். என் உடலில் ஒவ்வொரு பகுதியையும் இந்தப் பாம்புவின் உடல் உரசிக்கொண்டு நகர்வது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது’ என்று சிலீர்க்க சிலீர்க்க பதில் கூறுகிறார் காஜல்.
இந்த வீடியோவை காஜல், தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இதுவரை 855,275 பேர் பார்த்து ரசித்துள்ளனர். ஆகவே சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகி உள்ளது. காஜல் அகர்வால் தற்போது ‘குயின்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் வெளியான இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!