[X] Close

கரண்ட் அடித்து தூக்கி வீசப்பட்ட குட்டி குரங்கு..! பயணிகள் சோகம்

Female-Monkey-suffers-electric-shock-at-railway-station

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் உயர் மின்னழுத்தம் கொண்ட கம்பியை தொட்ட குட்டி பெண் குரங்கு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டது.

சென்னை கடற்கரை ரயில்நிலையத்தில் நேற்று குட்டி குரங்கு ஒன்று அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. திடீரென அந்த குரங்கு மின்சாரம் வரும் என தெரியாமல் அங்கிருந்த உயர்அழுத்த மின் கம்பியை தொட்டது. இதில் சடாரென தண்டவளாத்தில் குட்டி குரங்கு தூக்கி வீசப்பட்டது. அப்போது வேகமாக பயணித்த ரயில் ஒன்று குட்டி குரங்கின் வலது கை மீது ஏறிச் சென்றது. இதனால் வலியால் அந்த குட்டி குரங்கு துடித்தது. இதனைக் கண்ட பயணிகள் உடனே வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

அதனடிப்படையில் அங்கு வந்த அதிகாரிகள் வலியால் துடித்த குட்டி குரங்கினை மீட்டனர். அதிகம் சேதம் அடைந்திருந்த குட்டி குரங்கின் வலது கை மருத்துவர்களால் அகற்றப்பட்டது. தற்போது 70 சதவீதம் குணமடைந்துள்ள அந்த குட்டி குரங்கு இன்னும் சில நாட்களுக்குள் பூரண குணமடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close