இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
ஆசியக் கோப்பையின் வெற்றியை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்த சீரியஸில் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆசியக் கோப்பை தொடரின்போது ஓய்வில் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நாளை மீண்டும் அணியில் விளையாடவுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2002ஆம் ஆண்டு ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டானில் வெற்றி பெற்றது. இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் எடுத்துக்கொண்டால், வெஸ்ட் இண்டீஸ் கடைசியாக 1994ஆம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் தான் வெற்றி பெற்றது. இதனால் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை தோற்றுள்ளதால், இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
நாளைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாவலாக இருக்கப்போகும் இந்திய வீரர் யார்? என ஆராய்ந்து பார்த்தால், அவர் அஸ்வினாக தான் இருப்பார் என்பதை கிரிக்கெட் வரலாறு கூறுகிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அஸ்வினை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிய பெருமை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தான் உள்ளது. இதுவரை அஸ்வின் மொத்தம் 4 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். அந்த நான்கு சதங்களுமே வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தான் அடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக :
முதல் சதம் மும்பையில் - 103
2வது சதம் கொல்கத்தாவில் - 124
3வது சதம் அண்டிகாவில் - 113
4வது சதம் செயிண் லூசியாவில் - 118
பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அஸ்வின் 51 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்