பிரதமர் மோடியின் சகோதரர் இன்னும் ஆட்டோ டிரைவராகவே இருக்கிறார் என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் தேப் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் சர்ஜிகல் ஸ்டிரைக்கின் ஓராண்டு கொண்டாட்டத்தில் திரிபுரா முதலமைச்சர் கலந்துக் கொண்டு பேசினார். அதில் “பிரதமர் மோடி 4 ஆண்டுகளாக இந்திய நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். குஜராத்தின் முதலமைச்சராக 13 ஆண்டுகள் இருந்துள்ளார். ஆனாலும் அவரது குடும்பம் இன்னும் நடுத்தர வர்க்கமாக இருக்கிறது. அவரது அம்மா சிறிய வீட்டில் வசித்து வருகிறார். மோடியின் சகோதரர் இன்னமும் ஆட்டோ ஓட்டுநராகத்தான் இருக்கிறார்” என்று தெரிவித்தார். மேலும் “தனது அம்மாவுக்கு அரசாங்க வீட்டைக்கூட ஒதுக்காத வேறு எந்த நாட்டின் பிரதமரையும் பார்க்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
“நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். குடும்ப வறுமை என்பது பாவம் இல்லை; தாழ்வு மனப்பான்மையோடு இருப்பதுதான் உண்மையான வறுமை. நானும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன்தான். ஆனாலும் மனதளவில் ஏழை இல்லை, அதனால்தான் மக்கள் என்னை ஒரு நாட்டின் முதலமைச்சராக அமர வைத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோடியின் சகோதரர் என்று ஒரு ஆட்டோ ஓட்டுநரின் புகைப்படம் வைரலானது. ஆனால் அவருக்கும் பிரதமர் மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பின்னர் தெரியவந்தது.
மகாபாரத காலத்திலேயே இணையம், செயற்கைகோள் இருந்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் பலரின் கிண்டலுக்கு ஆளானவர் திரிபுரா முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்