Published : 30,Sep 2018 12:20 PM

மேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ

Topless-Serena-Williams-Singing-For-Breast-Cancer-Awareness-Sparks-Stir

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மார்பக புற்று நோய்க்காக விழிப்புணர்வு பாடல் ஒன்றினை பாடியுள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மேலாடையின்றி அவர் பாடலை பாடுவதுபோல் உள்ளது. தனது இரண்டு கைகளை மார்பகங்களை மறைத்துக் கொண்டுள்ளார். 

1991ம் ஆண்டு மார்பக புற்று நோய்க்கு எதிராக ஆஸ்திரேலியாவின் டிவினைல்ஸ் பேண்ட் குருப் பாடிய பாடலின் வெர்சனை செரினா வில்லியம்ஸ் பாடியுள்ளார். அதேபோல், இன்ஸ்டாகிராமில் சில குறிப்புகளையும் பதிவிட்டுள்ளார். அதில், எல்லா நிறங்களையும், உலகம் முழுமைக்கும் உள்ள பெண்கள் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதால்தான் இந்த பாடலை பாடியுள்ளதாக கூறியுள்ளார். இந்த பதிவு உருக்கமாக உள்ளது. 

        

கேன்சர் நோய் விழிப்புணர்வுக்காக செரினா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை 10 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர். செரினா வில்லியம்ஸின் இந்த தைரியமான முயற்சிக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் இந்த வீடியோவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்