
அமைதி, வளர்ச்சிக்கு யார் இடையூறு ஏற்படுத்தினாலும் அவர்களுக்கு நமது வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மன் கி பாத் என்னும் நிகழ்ச்சியில் வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். அந்த வகையில் இன்று நாட்டு மக்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டம் குறித்தும் பேசினார். நமது இந்திய இராணுவத்தையும், வீரர்களின் துணிச்சலையும் எண்ணி நாட்டு மக்கள் பெருமை கொள்கின்றனர் என தெரிவித்த பிரதமர் மோடி, அமைதி வளர்ச்சிக்கு யார் இடையூறு ஏற்படுத்தினாலும் அவர்களுக்கு நமது வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.
காந்தியடிகளின் போதனைகள் தற்காலத்திற்கு மிகவும் உகந்ததாக இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, தூய்மையே சேவை திட்டம் திட்டம் வெற்றிக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.