
திருச்சி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
சென்னையிலிருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பயணம் செய்து கொண் டிருந்தனர். திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயி னர். 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் புதிதாக வாங்கிய வீட்டை பார்ப்பதற்காக சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சுப்ரமணி, அவரது மனைவி ஜெயலட்சுமியின் பெயரில் திருச்சி பெட்டவாய்த்தலை அருகேயுள்ள சக்தி நகரில் 3 மாதங்களுக்கு முன் புதிதாக வீடு வாங்கியுள்ளார். அவ்வப்போது அங்கு குடும்பத்தோடு சென்று விடுமுறை நாளை கழிப்பதை சுப்ர மணி வழக்கமாகக் கொண்டுள்ளார். அதேபோல், சுப்ரமணி, அவரது மனைவி ஜெயலட்சுமி, மகன்கள் விஜயராகவன், பாலமுருகன், மரு மகன் மஞ்சுநாதன் அவரது மனைவி மற்றும் குழந்தைகளோடு ஒரே காரில் 13 பேர் பேட்டவாய்த்தலைக்கு நேற்று நள்ளிரவில் புறப்பட்டுள்ளனர். காரை மஞ்சுநாதன் ஓட்டியுள்ளார்.
சமயபுரம் சுங்கச்சாவடி அருகே கார் சென்ற போது, சாலையோரம் நின்றிருந்த லாரியில் கார் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில், சுப்பிரமணி, ஜெயலட்சுமி, விஜயராகவன் அவரது மனைவி கோமதி, பாலமுருகன் அவரது 11 வயது மகன் கந்தசாமி, மஞ்சுநாதன் அவரது 10 வயது மகள் வசந்தலட்சுமி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
பாலமுருகனின் மனைவி கவிதா, மஞ்சுநாதனின் மனைவி பாக்கியலட்சுமி, அவர்களது 5 வயது குழந்தை ரம்யா, விஜயராகவனின் குழந்தை கள் கந்தலட்சுமி, ஜெயஸ்ரீ ஆகியோர் படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.