அதிமுக அரசு முதலீடுகளை ஈர்க்கத் தவறிவிட்டதால் வெளிமாநில முதலீட்டாளர்கள் தமிழகம் வர ஆர்வம் செலுத்தவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக நிதி நிர்வாகம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை கானல் நீராகவே உள்ளதாகக் தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு மிகவும் மோசமான பின்னடைவில் உள்ளதாக அவர் பட்டியலிட்டுள்ளார். தமிழகத்தின் கடன் நிலுவைத் தொகை 3.55 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறையால் தமிழக நிதி நிர்வாகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதற்கு முன்பு, முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் அதிமுக அரசின் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் புரிந்துணர்வு ஒப்பந்தகளுக்கே இதுவரை பதில் வராத நிலையில், இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குஜராத்தில் இருந்து மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Loading More post
எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது! #MorningMotivation #Inspiration
நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix