[X] Close

கழிவறை இல்லையென்று பிரிந்து சென்ற மனைவி : புதுமாப்பிள்ளை தற்கொலை

Salem-Newly-Married-Man-Suicide-for-Wife-Leave

ஓமலூர் அருகே வீட்டில் கழிவறை இல்லை என்பதற்காக மனைவி பிரிந்துச்சென்றதால் புதுமாப்பிள்ளை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேவுள்ள கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லதுரை. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், அதே நிறுவனத்தில் வேலைபார்க்கும் பெண்ணை காதலித்து 3 நாட்களுக்கு முன் வீட்டிற்கு தெரியாமல் திரும‌ணம் செய்துகொண்டார். தன் காதல் மனைவியுடன் செல்லதுரை தன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். செல்லதுரை வீட்டில் கழிவறை இல்லாததால், அந்தப் பெண் அதிருப்தியடைந்துள்ளார். கழிவறை இல்லாத வீட்டில் தன்னால் வாழ முடியாது எனக்கூறி அந்தப் பெண், தன் கணவரை பிரிந்து தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். 

இதனால், மனமுடைந்த செல்லதுரை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் செல்லதுரையின் உடலை மீட்டனர். கழிவறை இல்லாததால் காதல் மனைவி தன்னை பிரிந்துச்சென்ற இழப்பை தாங்க முடியாமல் செல்லதுரை தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். திருமணமான 3ஆவது நாளிலேயே புதுமாப்பிள்ளை உயிரிழந்ததால், கோட்டகவுண்டம்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


Advertisement

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close