Published : 31,Mar 2017 02:32 AM
போங்கப்பா, இதே வேலையா போச்சு: அனிருத் அப்செட்

என்னை பற்றி வாரம் ஒரு வதந்தி உலா வருகிறது என்று இசை அமைப்பாளர் அனிருத் கூறினார்.
இசை அமைப்பாளர் அனிருத், சென்னையில் உள்ள நகைக்கடை அதிபர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி அனிருத்திடம் கேட்டபோது மறுத்தார்.
‘வாரம் ஒரு வதந்தி என்னைப் பற்றி வந்துகொண்டிருக்கிறது. வழக்கமாக இரவில் பணியாற்றிவிட்டு மதியம்வரை தூங்குவேன். எழுந்து பார்த்தால் ஏதாவது ஒரு வதந்தி வந்திருக்கும். அது போலதான் இதுவும். இந்த திருமண வதந்தியால் என் அம்மாவுக்கு வாழ்த்து மெசேஜ்கள் வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இது ஆதாரமற்ற செய்தி. ஏன், இப்படி வதந்திகளை ஒரு வேலையாகவே செய்கிறார்கள் எனத் தெரியவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.