[X] Close

சொகுசு கார் விபத்து: ஹீரோவுக்கு எலும்பு முறிவு: வில்லன் நடிகர் காயம்!

Kannada-actors-Darshan--Devaraj-injured-in-road-accident

சொசுகு கார் விபத்துக்குள்ளானதில் பிரபல ஹீரோவின் கையில் எலும்பு முறிந்தது. அவருடன் வந்த வில்லன் நடிகர், அவர் நண்பர் படுகாயம் அடைந்தனர்.

பிரபல கன்னட ஹீரோ தர்ஷன்.  குணச்சித்திர நடிகர் தேவராஜ். இவர், தமிழில் விஷாலின் மலைக்கோட்டை, விஜயுடன் ’வில்லு’ படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கன்னடத்தில் ஹீரோ, வில்லன், குணசித்திர வேடங்களில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தேவராஜின் மகன் பிரஜ்வால். இவரும் கன்னட படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். தர்ஷனின் நண்பர் அந்தோணி ராய். இவர்கள் மூவரும் மைசூரு அருகில் உள்ள ஹின்கல்-லின் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்று விட்டு , தர்ஷனின் சொகுசு காரில் நேற்று முன் தினம் பெங்களூருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அந்தோணி ராய் காரை ஓட்டினார்.

Read Also -> ’பெங்களூர் டேஸ்’ ரீமேக்: நடிகர் ராணா திடீர் வருத்தம்!


Advertisement

(தர்ஷன், தேவராஜ், பிரஜ்வால்)

அதிகாலை 3 மணி அளவில் மைசூரு அருகே இனகல் என்ற இடத்தில் வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைதடுப்பில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இடிபாடுகளில் சிக்கி நடிகர்கள் தர்ஷன், தேவராஜ், அந்தோணி ராய், பிரஜ்வால் காயமடைந்தனர். இதில் தர்ஷனுக்கு வலது கையில் எலும்பு முறிவும், தேவராஜுக்கு இடது கையில் 2 விரல்களில் எலும்பு முறிவும், அந்தோணி ராய்க்கு தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது. பிரஜ்வல் லேசான காயமடைந்தார்.


Advertisement

இதைதொடர்ந்து 4 பேரும் மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைகளில் காயம் அடைந்த நடிகர்கள் தர்ஷன், தேவராஜ் ஆகியோருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Read Also -> ’நான் வேணா ஓய்வு பெறட்டுமா?’ மேத்யூஸ் விரக்தி! 

இந்த விபத்து பற்றி போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. இருப்பினும் வி.வி.புரம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

விபத்தில் காயமடைந்த நடிகர் தர்ஷனின் மனைவி ஜெயலட்சுமி கூறும்போது, ‘தர்ஷனுக்கு வலது கை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். பயப்பட தேவையில்லை. 2 வாரம் ஓய்வெடுக்கும் படி டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர்’ என்றார். 


Advertisement

Advertisement
[X] Close