“சிம்டாங்காரன் எங்கானாநீ சீரன் நின்ட்டேன் பாரேன் மஸ்த்து-அப்டிக்கா போறேன்” என முதல் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளது.
மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்தில் நடித்து விஜய் வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் தொழிலதிபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்5கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இதன் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தீபாவளிக்குப் படம் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று இன்று மாலை வெளியாகியுள்ளது.
சிம்டாங்காரன் எனத் தொடங்கும் அப்பாடல், முழுமுழுக்க சென்னையின் கலப்புத் தமிழ் வார்த்தைகளால் எழுதப்பட்டுள்ளது. “சிம்டாங்காரன் எங்கானாநீ சீரன் நின்ட்டேன் பாரேன் மஸ்த்து-அப்டிக்கா போரேன்” என முதல் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளது. இதேபோல பாடல் முழுவதும் கானாத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். சிம்டாங்காரன் என்றால், “ கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன். கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் சிம்டாங்காரன்” எனக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்