[X] Close

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா.. அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி பெயர்கள்..!

MK-Stalin-and-TTV-Dhinakaran-name-in-admk-invitation

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி, ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


Advertisement

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், எம்ஜிஆர் படத்தைத் திறந்து வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச இருக்கிறார்.
வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி மற்றும் சென்னையைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களுடன், திமுக எம்எல்ஏக்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.‌ அவர்களோடு ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் பெயரும் இடம்பெற்றுள்ளது.


Advertisement

அரசு விழா அழைப்பிதழில், மாற்றுக்கட்சியினர் பெயரும் முறைப்படி இடம்பெற்றிருப்பதை அரசியல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close