Published : 30,Mar 2017 12:49 PM

ரூ.100 கோடி அபராதத் தொகையை வசூலிப்பது எப்படி?: கர்நாடக அரசின் மனு மீது ஏப்.5ல் விசாரணை

SC-to-hear-Karnataka-s-Affidavit-in-Jaya-DA-case-on-Aprril-5

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத் தொகையை வசூலிப்பது குறித்த கர்நாடக அரசின் மனு மீது ஏப்ரல் 5ல் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. பெங்களூரு நீதிமன்றம் அளித்த தண்டனை மற்றும் அபராதத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கு தலா ரூ.4 கோடியும் அபராதமாக விதித்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு விதித்த ரூ.100 கோடி அபராதத் தொகையை வசூலிக்கும் முறை குறித்த தெளிவு இடம்பெறவில்லை என்று கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அபராதத் தொகையை வசூலிப்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கர்நாடக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது ஏப்ரல் 5ல் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்