Published : 21,Sep 2018 04:58 AM

சதத்தை நோக்கி சென்னை விமான நிலையம் : 80வது முறை உடைந்த கண்ணாடி

Chennai-Airport-Glass-Wall-Fallen-80th-Time

சென்னையில் விமான நிலையத்தின் சுவற்றில் பொறுத்தப்பட்டிருந்த கண்ணாடி 80வது முறையாக உடைந்தது. 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள சுவற்றின் கண்ணாடிகள் உடைவது தொடர்கதையாக உள்ளது. எத்தனை முறை மாற்றினாலும், பல திட்டங்களை கையாண்டாலும், கண்ணாடி உடைவது நின்றபாடில்லை. கடந்த பல மாதங்களாக கண்ணாடி உடைப்பு ஏற்படமால் இருப்பதற்காக விமான நிலைய அதிகாரிகள் பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பலன் இல்லை. இந்த நிலையில் நேற்று விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் உள்ள 19வது நடைமேடையின், 2வது தளத்தில் பொறுத்தப்பட்டிருந்த 5 அடி கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. உடனே அதை விமான நிலைய அதிகாரிகள் மாற்ற முயன்றபோது, அது உடைந்து விழுந்தது. கண்ணாடி உடையும் என அதிகாரிகள் முன்கூட்டியே கணித்துவிட்டதால், இதில் யாருக்கும் விபத்து ஏற்படவில்லை. விமான நிலையத்தில் 80வது கண்ணாடி முறையாக கண்ணாடி உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்