Published : 30,Mar 2017 10:25 AM
இப்படியா டிரெஸ் போடுவது? பத்திரிகையாளருக்கு கோர்ட் கண்டிப்பு

ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்ட பத்திரிகையாளருக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்ராவில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி மஞ்சுளா மற்றும் ஜி.எஸ் குல்கர்னி அடங்கிய அமர்வு மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரித்தது. அப்போது ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த பத்திரிகையாளரை நீதிபதி மஞ்சுளா கண்டித்தார். ‘இது என்ன மும்பை கலாசாரமா?’என்றும் கேள்வி எழுப்பினார். நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளும் பத்திரிகையாளர்கள் சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நீதிபதி மஞ்சுளா தெரிவித்தார்.
இதன் பின்பு, மும்பை மாநகராட்சியின் சட்ட ஆலோசகர் எஸ்.எஸ் பக்கலேவிடம் பத்திரிகையாளகளுக்கு உடை கட்டுப்பாடு இல்லையா என்றும் கேட்டார். அவர் ‘இல்லை’ என பதிலளித்தார். அதன்பிறகு நீதிபதி பத்திரிகையாளர்களுக்கான உடை கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்ற ஒரு பத்திரிகையாளரிடம் நீதிமன்றம் இப்படி கேள்வி எழுப்புவது இதுவே முதல் முறை.