Published : 30,Mar 2017 10:23 AM

வாங்க காற்றுல வரையலாம் படம்

French-carpenter-creates-an-LED-stick-that-paints-colors-in-THIN-AIR

பிரான்சை சேர்ந்த நிறுவனம் ஒன்று, காற்றில் படம் வரையும் எல்இடி ஸ்டிக் ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளது.

மரத்தாலான ஸ்டிக் ஒன்றில் எல்இடி கதிர்களை உமிழும் விளக்குகளைப் பொருத்தி இந்த அதிசயத்தை டிஐஒய் நெட்வொர்க் எனும் நிறுவனம் சாத்தியப்படுத்தியுள்ளது. இந்தக் கருவிக்கு பிக்செல் ஸ்டிக் என்று பெயரிட்டுள்ளனர். பார்ப்பதற்கு மேஜிக் போல தெரிந்தாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் இது சாத்தியமே என்கிறது அந்த நிறுவனம்.

எல்இடி விளக்குகள் காற்றில் ஒரே நேர்கோட்டில் நமக்குத் தேவையான படத்தை நிறங்களுடன் பிரதிபலிக்கும். அதனைப் பார்த்தால் காற்றில் வரையப்பட்ட ஓவியம் போல காட்சியளிக்கும் என்று டெக்னாலஜியை விவரிக்கிறார்கள், டிஐஒய் நெட்வொர்க் ஆய்வாளர்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்