[X] Close

ஆசிய கோப்பை சூப்பர் 4 பட்டியல் - பாகிஸ்தானா? பங்களாதேஷா?

Asia-Cup-2018--Super-4---Pakistan---or-Bangladesh--

ஆசிய கோப்பையின் சூப்பர் 4 அணிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரின் தகுதிச்சுற்றுகளில் இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் தோல்வியடைந்து வெளியேறிவிட்டன. ஹாங்காங் அணி இந்தியா மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ள முடியாமல் வெளியேறியது எதார்த்தமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்து இலங்கை வெளியேறிய சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியான சம்பவம். ஆப்கானிஸ்தான் அந்த அளவிற்கு வலுவாக இருக்கிறது என்பதை விட, இலங்கை பலவீனமாக இருக்கிறது என்பதே பரவலான கருத்தாக உள்ளது.


Advertisement

தற்போது வெளியிடப்பட்டுள்ள சூப்பர் 4 பட்டியலின் படி, இந்திய அணி நாளை பங்களாதேஷை எதிர்கொள்கிறது. பின்னர் 23ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. அதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானை களத்தில் சந்திக்கிறது. இதில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளையும் இந்திய வென்றுவிட்டு, அந்த இருநாடுகளும் ஆப்கானிஸ்தானை வென்றுவிட்டால், 26ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையேயான போட்டியில் அனல் பறக்கும். ஆனால் கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறும் கருத்துப்படி, பாகிஸ்தான் இந்தியாவிடம் எளிமையாக தோற்றாலும், அது பங்களாதேஷை எளிமையாக வெல்லும் என தெரிவிக்கின்றனர். 


Advertisement

Advertisement
[X] Close