Published : 19,Sep 2018 08:50 AM
இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் ஷாப்பிங் வசதி

இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்களை மட்டுமே பகிர்ந்துகொள்ளும் வசதி இன்ஸ்டாகிராமில் இருக்கும் நிலையில் அதில் அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்சனில் ஆன்லைன் ஷாப்பிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஆன்லைன் விற்பனையாளர்களின் பொருட்கள் குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.
சில்லரை விற்பனையாளர்களை கவரும் வகையில் சலுகை விளம்பரங்களையும் இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கிய பொருட்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இணைய வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியில் இன்ஸ்டாகிராம் ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கியுள்ளது.