[X] Close

புலியை விஷம் வைத்து கொன்றவருக்கு சிறைத்தண்டனை..!

Ooty-Man-gets-3-Year-Jail-for-poisoning-tiger

நீலகிரி மாவட்டம் ஊட்டி இறந்த எருமையின் உடல் மீது விஷம் வைத்து புலியை கொன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

நீலகிரி மலையடி வாரத்தில் உள்ள தெங்குமரகடா கிராம வனத்திற்குள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி புலி ஒன்று சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து கிடந்தது. இறந்த புலியின் அருகில் உயிரிழந்த எருமை மாடு ஒன்றின் உடலும் கிடந்தது. இதனைக் கண்ட வனத்துறையினருக்கு புலியின் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டனர்.


Advertisement

போலீசாரின் விசாரணையில் திமையன் என்ற விவசாயி புலியை விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. 60 வயதாகும் விவசாயி திமையன், தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். அவர் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று மேய்ச்சலுக்காக வனத்திற்குள் சென்றபோது புலி கடித்து குதறியதில் அது உயிரிழந்தது. எருமையை பாதி தின்றுவிட்டு அந்த புலி அங்கிருந்து சென்றது. தன் எருமை உயிரிழந்த விரக்தியில்  புலியை கொல்வதற்காக எருமையின் உடல் மீது விஷத்தை வைத்தார் திமையன். மிச்சம் மீதியை திண்பதற்காக மீண்டும் அங்கு வந்த புலி எருமையை மீண்டும் தின்றது. திமையன் நினைத்ததுபோல் மாமிசத்தோடு விஷத்தையும் தின்ற புலி உயிரிழந்தது. இதுதொடர்பாக திமையன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த கோத்தகிரி நடுவர் மன்ற நீதிபதி ஸ்ரீதர், திம்மையனுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் பத்தாயிர‌த்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Advertisement

Advertisement
[X] Close