“நான் ஒரு ஹிட்லர் தாய்..” மனம் திறந்த கஜோல்

“நான் ஒரு ஹிட்லர் தாய்..” மனம் திறந்த கஜோல்
“நான் ஒரு ஹிட்லர் தாய்..” மனம் திறந்த கஜோல்

குழந்தைகளிடம் தான் கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும், ஆனால், தனது கணவர் அதற்கு நேர்மாறாக நடப்பதாகவும் பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகருமான அஜய் தேவ்கனுக்கும் நடிகை கஜோலுக்கும் கடந்த 1999-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் குழந்தைகளிடம் தான் கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும், ஆனால், தனது கணவர் அதற்கு நேர்மாறாக நடப்பதாகவும் பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கணவரும் நடிகருமான அஜய் தேவ்கன், தனது குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து காரியத்தைக் கெடுப்பதாக கூறினார். தான் ஒரு ஹிட்லர் தாய் என்ற அவர், சில நேரங்களில் கண்டிப்பும் கடுமையும் குழந்தை வளர்ப்பில் அவசியமானவை என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com