Published : 17,Sep 2018 03:41 AM
'ஒழுங்கா விளையாடலனா புது முகங்களை பார்க்க வேண்டி வரும்' எம்எஸ்கே பிரசாத் எச்சரிக்கை

வீரர்களுக்கு முடிந்தவரை வாய்ப்புகள் கொடுக்கப்படும். அப்படியும் அவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டாவிட்டால் புது முகங்களை தான் தேர்வு செய்ய வேண்டும் என எம்எஸ்கே பிராசாத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. கேப்டன் விராட் கோலியை தவிர பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறும்போது, “ இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே விளையாடியதாக கருதுகிறேன். 5 டெஸ்ட் தொடரிலும் மொத்தமாக 60-க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்தது அவர்களின் திறமைக்கு சாட்சியாக உள்ளது. அதேசமயம் பீல்டிங்கும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் பேட்டிங் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.
Read Also -> கரிபியன் லீக் தொடர்: 3-வது முறையாக கோப்பையை வென்றது பிராவோ அணி
குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்யும்போது அவர்களுக்கு போதிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்படியும் அவர்கள் தங்களின் திறமையை வெளிக்காட்டாவிட்டால் இளம் வீரர்களை தான் தேர்வு செய்ய வேண்டும். நமது தொடக்க ஆட்டக்காரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அதேசமயம் இரண்டு அணியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை. கடந்த சில வருடங்களாகவே 3, 5 வீரர்களாக களமிறங்கும் புஜாரா மற்றும் ரஹானே நன்றாகவே செயல்படுகன்றனர். மிடில் ஆர்டரில் ஆட அவர்களுக்கு நல்ல அனுபவமும் இருக்கிறது. ஆனாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாட வேண்டும்.
Read Also -> சாதி ஒழிப்பும் பெண் விடுதலையும் : பெரியாரின் 140ஆவது பிறந்த நாள்
பல முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டும் வீரர்கள் ஜொலிக்காத பட்சத்தில் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் இந்திய ஏ அணியில் சிறப்பாக ஆடும் இளம் வீரர்களை தான் தேர்வு செய்ய வேண்டும். உலகத்திலேயே சிறந்த ஸ்பின்னராக அஷ்வின் இருக்கிறார்” என்றார் எம்.எஸ்.கே.பிரசாத்.