Published : 16,Sep 2018 02:01 AM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

Chance-for-Rain-in-Tamilnadu-and-Puducherry

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம்
மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் 10 சென்டிமீட்டர் மழையும் செஞ்சியில் 7 சென்டிமீட்டரும் கிருஷ்ணகிரி, புள்ளம்பாடியில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்