[X] Close

ஹரியானா மாணவி பாலியல் வன்கொடுமை: துப்பு தந்தால் 1 லட்சம் பரிசு

Army-man-among-3-accused-in-gangrape-of-Haryana-CBSE---topper

சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த ஹரியானா மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றத்தில் ராணுவ வீரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ஹரியானா மாநிலம் ரேவாரி பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தாரா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர். இந்நிலையில் மாணவி கடந்த 12-ஆம் தேதி மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையத்திற்கு சென்றுக் கொண்டிருந்த நேரத்தில் கடத்தப்பட்டார். பின்னர் 3 பேர் கொண்ட கும்பல், மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக ராணுவ வீரர் ஒருவர் இருப்பது தெரியவந்துள்ளது. பங்கஜ் என்ற அந்த ராணுவ வீரர் ராஜஸ்தானில் ஏற்கனவே பணிபுரிந்தவர். இதுதவிர மணிஷ், மற்றும் நிசு ஆகிய இருவருமும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரரின் புகைப்படத்தை ஹரியானா போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் அவர் குறித்த தகவலை தெரிவிப்போருக்கு 1 லட்சம் ரொக்கம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூவரையும் கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது,  நாங்கள் ஒருபோதும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close