போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் விமானநிலையத்துக்கு சூட்டப்பட்டிருக்கிறது.
ரொனால்டோவின் சொந்த ஊரான மடெய்ரா தீவுகள் பகுதியில் உள்ள சர்வதேச விமானநிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். போர்ச்சுக்கல் அணியின் ஹீரோவாக விளங்கும் ரொனால்டோவுக்கு சிலை, அருங்காட்சியகம் மற்றும் அவரது பெயரில் உணவகம் என பல்வேறு கௌரவங்கள் மடெய்ராவில் அளிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், அந்நகரிலுள்ள சர்வதேச விமானநிலையத்தின் பெயர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச விமானநிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்து ரொனால்டோ ஆற்றிய ஏற்புரையில், சொந்த ஊரில் கிடைக்கும் கௌரவம் சிறப்புவாய்ந்தது என்று குறிப்பிட்டார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!