Published : 14,Sep 2018 04:41 PM

சைஃபீ மசூதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு

PM-Modi--At-Muslim-Event--Praises-Work-Done-By-Dawoodi-Bohras-In-Gujarat

மத்தியப்பிரதேசத்தில் பிரபல சைஃபீ மசூதிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி‌க்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தாவூதி போரா சமுதாயத்தினரின் சார்பில் இந்தூரில் உள்ள சைஃபீ மசூதியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மோடி, அமைதி என்பதை முதன்மையாக கொண்டு செயல்படும் தா‌வூதி போரா சமூகத்தினர், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக விளங்குவதாக தெரிவித்தார். 

நடப்பாண்டில் உள்நாட்டு உற்பத்தியை 10 சதவீதமாக உயர்த்துவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது தாவூதி போரா சமூகத் தலைவர் சையத்னா முஃபாதல் சைஃபுதீன் உள்ளிட்டோர் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்