கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்த விஜய்: வைரல் வீடியோ

கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்த விஜய்: வைரல் வீடியோ
கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்த விஜய்: வைரல் வீடியோ

விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்தின் மகள் திருமணத்தில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். 

நடிகர் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்தின் மகள் அங்காள பரமேஸ்வரி - அபிஜித் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா புதுச்சேரி-  திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதற்கிடையே நடிகர் விஜய் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்தபோது அவரது ரசிகர்கள் அவரை வரவேற்கும் விதமாக வரவேற்பு விழா நடைபெறும் வழிநெடுக்க கட் அவுட் மற்றும் பேனர்கள் வைத்திருந்தனர். மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருமண வரவேற்பு விழாற்கு வருகை தந்ததால் மண்டமே திக்குமுக்கு ஆடியது. மேலும் விஜய் திருமண வரவேற்பு மேடையில் கூட்டம் நெரிசலுக்கு இடையே வந்து தனது வாழ்த்தை தெரிவித்தார். இந்நிலையில் அவர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com