நெல்லையில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பெட்ரோல் நிரப்பும் போது, தீ விபத்து ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் முருகன்குறிச்சியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற ஆல்வின் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறியுள்ளார். ஊழியர் பெட்ரோலை நிரப்பும் போது டேங்க் நிரம்பி பெட்ரோல் வெளியே வழிந்ததில் ஆல்வினின் ஆடைகளும் நனைந்தன.
பின்னர் பைக்கை ஸ்டார்ட் செய்த போது பைக்கின் டேங்க் பகுதியில் திடீரென பற்றிய தீ, ஆல்வின் மீதும் பரவியது. துரிதமாக செயல்பட்ட பங்க் ஊழியர்கள் தீயணைப்பான் கொண்டு தீயை உடனடியாக அணைத்தனர். இதனால் பெருஞ்சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்தும் 40 சதவிகித தீக்காயத்துடன் ஆல்வின் பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!