[X] Close

15 நிமிடங்களில் 5 கொலை... நெஞ்சை பதற வைத்த நபரின் வெறிச்செயல்..!

Five-people-killed-by-Gunman-in-California--then-himself--police

அமெரிக்காவில் தனது மனைவி உள்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்ற நபர், இறுதியில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.


Advertisement

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேக்கர்ஸ்ஃபீல்டு பகுதியில் வசித்த வந்த நபர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக் கொலை செய்து விட்டு, ஒரு லாரி நிறுவனத்தின் ஊழியரையும் படுகொலை செய்தார். பின்னர் மற்றொரு ஊழியரை துரத்திச் சென்றபடி சுட்டுக் கொலை செய்த அந்த நபர், தனது வீடு அருகே மேலும் இரண்டு பேரை கண்மூடித்தனமாக சுட்டார். தொடர்ந்து அவ்வழியாக தனது குழந்தையுடன் காரில் வந்த ஒரு பெண்ணையும் வழிமறித்து துப்பாக்கியை காண்பித்து மிரட்டியுள்ளார்.


Advertisement

இதில் மிரண்டு போன அந்த பெண் காரை விட்டு இறங்கியபோது, திடீரென தன்னைத் தானே சுட்டுக் கொண்டு அந்த நபர் தற்கொலை செய்துக் கொண்டார். 10 முதல் 15 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் படுகொலை சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஐந்து பேரை படுகொலை செய்த அந்த நபர் யார்? ஏன் படுகொலை செய்தார் என்ற விவரங்களை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close