[X] Close

புற்றுநோயால் 1 கோடி பேர் இறக்க நேரிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Cancer-will-kill-nearly-10-million-people-this-year

புற்றுநோயால் இந்த ஆண்டு மட்டும் சுமார் 1 கோடி பேர் இறக்க நேரிடும் என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.


Advertisement

அண்மையில் இந்நிறுவனம் நடத்திய ஆய்வில், புற்றுநோயால் இந்த ஆண்டு மட்டும் 1 கோடியே 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறி யப் பட்டுள்ளது. அவர்களில் சுமார் ஒரு கோடி பேர் இந்த ஆண்டு உயிரிழக்க நேரிடும் என ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு கோடியே 40 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 80 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவு முறை, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, புகைப்பழக்கம், உடல் உழைப்பு இல்லாமை, காற்று மாசுப்பாடு போன்ற காரணங்களால் புற்றுநோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.


Advertisement

ஆனால் புதிதாக கண்டறியக்கூடிய புற்றுநோய்கள் கட்டுப்படுத்தக் கூடியவையாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  வாழ்நாளில் ஆண்களில் ஐந்து பேரில் ஒருவரும், பெண்களில் ஆறு பேரில் ஒருவரும் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வுகள் தெரி விக்கின்றன. 21 ஆம் நூற்றாண்டில் புற்றுநோய் மட்டுமே உயிர்கொல்லியாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் கவலை தெரிவித்து ள்ளது.

 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close