[X] Close

மும்பை அணியின் கேப்டன் ஆனார் ரஹானே!

Rahane-to-captain-Mumbai-in-Vijay-Hazare-Trophy

விஜய் ஹசாரே டிராபி போட்டிக்கான மும்பை அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே. சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த தொடரில் பங்கேற்ற ரஹானே பத்து இன்னிங்ஸில் 257 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 25.70. அங்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி, வரும் 19 ஆம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது. இதில் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் பரோடாவை எதிர்கொள்கிறது. இதற்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டது. ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டன். இளம் வீரர் பிருத்வி ஷா அணியில் இடம்பிடித்துள்ளார்.


Advertisement

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் ரஹானேவுக்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் இடம் கிடைக்கவில்லை என்பதால் மும்பை அணிக்காக விளையாடுகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close