தெலங்கானா மாநிலத்தில் அரசுப்பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் மலைப்பாதையில் பேருந்து உருண்டு விழுந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதால் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Read Also -> வங்கிகளின் அதீத நம்பிக்கையால் அதிகரித்த வாராகடன் : ரகுராம் ராஜன் அறிக்கை
திம்மப்பேட்டையில் இருந்து சனிவார்பேட்டை என்ற இடத்துக்கு 104 பேருடன் சென்றுக்கொண்டிருந்த பேருந்து, கொண்டக்கட்டு கிராம மலைப்பாதையில் சென்ற போது நிலைதடுமாறி பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சிக்கி 8 குழந்தைகள், 25 பெண்கள் உள்பட 57 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 15 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகப்படியான ஆட்களை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Read Also -> சிறந்த பேருந்து ஓட்டுனரின் உயிரைப் பறித்த விபத்து - விடுப்பு கேட்டும் கொடுக்காதது காரணமா?
இந்நிலையில் விபத்து தொடர்பாக கொண்டக்கட்டு போக்குவரத்து மண்டல அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெலங்கானா இடைக்கால முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
Read Also -> அதிவேக ரயிலின் அடியில் பயணம் - இளைஞரின் விபரீத விளையாட்டு
விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில இடைக்கால முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 15 பேருக்கு சிறப்பு சிகிச்சையை இலவசமாக அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்