ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை பத்துப் பைசா என்பது போல பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விரக்தியுடன் பதில் கூறியிருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வழக்கை 3 வருடங்கள் கவனிப்பாரற்று நிலுவையில் போட்டு வைத்தது அதிமுக அரசுதான் என குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு முக்கியக் காரணம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்ததே என சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி இறுதியாண்டு முடிந்தவுடன் தேர்வு என்று வைக்காமல், கால அவகாசம் கொடுத்து தேர்வை நடத்த வேண்டும் என்பதே மு.க.ஸ்டாலின் அறிக்கையின் சாரம்சம் என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். பத்தாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கலைக்கப்பட்ட திட்டக்குழுவின் தலைவர் யார் என்று கேள்வி கேட்டு மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு அமைச்சர் பதவியில் நாம் நீடிப்போமா என்ற குழப்பம், ஆட்சி போனாலும் கட்சி தலைமையை கைப்பற்ற என்ன முயற்சி எடுக்கலாம். இப்படி பல்வேறு குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஸ்டாலினை பார்த்து “மாணவர்களை குழப்புகிறார்” என்பது விரக்தி நிறைந்த விவரங்கெட்ட அறிக்கையாக இருக்கிறது எனவும் தங்கம் தென்னரசு, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்