தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் அரை சதம் அடித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதற்கான டெஸ்ட் அணியில் தமிழகத்தை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் இடம்பிடித்திருந்தார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இவர், சரியாக விளையாட வில்லை. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்னும் எடுத்திருந்த அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் டக்-அவுட் ஆனார். இதையடுத்து மற்ற போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந்தியா திரும்பிய அவர், ‘அணிக்கு மீண்டும் திரும்புவேன். அணியில் இருந்து நான் நீக்கப்படுவது இது முதன் முறையல்ல. சில விஷயங் களில் முன்னேற வேண்டியிருக்கிறது. அதை சரி செய்துவிட்டு அதிக ரன்கள் குவிப்பேன்’ என்று கூறியிருந்தார்.
Read Also -> இந்தியாவுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்: பாக். கேப்டன்
Read Also -> கோலி அந்த விஷயத்தில் ரொம்ப 'வொர்ஸ்ட்'
இந் நிலையில் இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியில் விளையாட ஒப்பந்தம் ஆனார். ‘எஸ்செக்ஸ் அணிக்காக பங்கேற்க ஆர்வ முடன் உள்ளேன். சில ஆட்டங்களில் வெற்றிக்கு உதவ முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.
அதன்படி இங்கிலாந்து சென்ற அவர், அந்த அணியுடன் இணைந்தார். எஸ்ஸெக்ஸ் அணியும் நாட்டிங்கம்ஷைர் அணியும் மோதும் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய நாட்டிங்கம்ஷைர் அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எஸ்ஸெக்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முரளி விஜய், 95 பந்துகளைச் சந்தித்து 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு கவுண்டி போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் அக்ஷர் படேல், 9 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?