Published : 10,Sep 2018 09:39 AM

தமிழகத்தில் 3 தினங்களுக்கு மழை : வானிலை மையம்

Next-3-Days-Rain-fall-in-Tamilnadu-and-Puducherry---Chennai-Met

மூன்று தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

வளிமண்டலத்தின் கீழ் மற்றும் மேலடுக்குகளில் தெற்கு கர்நாடகா முதல் கன்னியாகுமரி வரையிலும், தெலுங்கானா முதல் கன்னியாகுமரி வரையிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. எனவே, 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், உள்மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஓரிரு முறை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்