Published : 29,Mar 2017 10:13 AM

தனுஷின் படத்தில் இருந்து வெளியேறிய விஜய் சேதுபதி

Vijay-Sethupathi-walks-out-of-Dhanush-s-Vada-Chennai

தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் வட சென்னை. அமலா பால், அண்ட்ரியா ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

வட சென்னையை மையமாக வைத்து உருவாகும் கேங்ஸ்டர் படமான இதில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கவண் படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, இந்த தகவலை உறுதி செய்தார். படப்பிடிப்பு நாட்கள் ஒத்து வராததால் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறியதாகவும், தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுடன் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்