Published : 10,Sep 2018 08:45 AM
ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் ஆணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஆலையில் ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குழு அமைத்தது. இந்த குழு ஆலையில் ஆய்வு செய்வதை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்துவதற்கு தடை கேட்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது எந்த அடிப்படையில் விசாரணைக்கு தடை கோருகிறீர்கள் என நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது.