Published : 09,Sep 2018 04:00 PM

முழு அடைப்பு போராட்டத்திற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: நாராயணசாமி

Puducherry-CM-request-People-to-co-ordinate-shop-closed-protest

பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, பெட்ரோல் , டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் நாளை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என நிர்வாகிகளிடம் கூறின‌ர்.

அப்போது, நாளை பேருந்துகளை இயக்கினால் தாக்குதல் நடத்துவோம் என கூட்டத்தில் இருந்த சில நிர்வாகிகள் கோஷமிட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்