Published : 29,Mar 2017 07:55 AM

பதவியின் மீது குறியாக இருந்தாரா? ஓபிஎஸ் ஸ்டாலினுக்கு பதில்

O-panneerselvam-Accusation-on-MK-stalin

பதவியின் மீதே ஓபிஎஸ் குறியாக இருந்ததாக குற்றம்சாட்டிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

நேற்று ஆர்.கே.நகரில் பரப்புரையில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஓ.பன்னீர்செல்வத்துக்கு வராத ஞானம், பதவிக்காக வந்ததா..? எனக் கேள்வி எழுப்பினார். பணமோசடியில் ஈடுபட்டதற்காக ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டவர் ஓபிஎஸ் என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா மறைந்த சமயத்தில் பதவியின் மீதே ஓபிஎஸ் குறியாக இருந்ததாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுகவின் பலவீனத்தை ஸ்டாலின் வெளிப்படுத்தியுள்ளார் என கூறினார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும் தெரிவித்தார்.

ஒரு குடும்பத்தின் கைக்குள் கட்சியும், ஆட்சியும் செல்வதை எம்ஜிஆர், ஜெயலலிதா எப்போதும் விரும்பியதில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பின் தான்தான் முதலமைச்சராக பதவியேற்றால்தான் சரியாக இருக்கும் என கேட்டுக்கொண்டதால்தான் தான்முதலமைச்சராக பதவியேற்றதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்