Published : 29,Mar 2017 02:51 AM
சர்ச்சையை உருவாக்காமல் சிறப்பாக கையாண்டார் ரஜினி: மாதவன் பாராட்டு

இலங்கை பயண சர்ச்சையை ரஜினிகாந்த் சிறப்பாக கையாண்டதாக நடிகர் மாதவன் கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், நடிகர் ரஜினி, சர்ச்சையை உருவாக்காமல் சூழ்நிலையை சிறப்பாக கையாண்டதாகக்
கூறினார். ஒருநடிகனாக, மனிதாபிமான அடிப்படையில் எதிர்காலத்தில் இலங்கை செல்லும்போது அதை அரசியலாக்கக்கூடாது என்று ரஜினி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது தமக்கு மிகவும் பிடித்திருந்ததாக மாதவன் கூறியுள்ளார்.
வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் எதிர்ப்பு காரணமாக லைகா நிறுவனம் சார்பில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதை நடிகர் ரஜினிகாந்த் ரத்து செய்திருந்தார்.