Published : 29,Mar 2017 02:23 AM

ரகுமான் பாட, ஹன்சிகா ஆட, ஓர் அடடே விருது விழா

IIFA-South-Utsavam-Awards-2017--Here-is-the-award-list-for-Tamil-movies

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (ஐஃபா) விருது வழங்கும் விழா ‘ஐஃபா உற்சவம்’ என்ற பெயரில் ஐதராபாத்தில் நடந்துவருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படத்துறைக்கான விருது வழங்கும் இவ்விழாவில், நேற்று தமிழ், மலையாளப் படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், சவுண்ட் என் ஜினீயர் ரசூல் பூக்குட்டி, நடிகர்கள் நாசர், மாதவன், ஜெயம் ரவி, ஜீவா, ராணா, பிரசன்னா, பிரேம்ஜி, கிருஷ்ணா, சுப்பு பஞ்சு, விஜய் வசந்த், ஜித்தன் ரமேஷ், கன்னட நடிகர் ரவிச்சந்திரன், நடிகைகள் ராதிகா, குஷ்பு, நிரோஷா, வரலட்சுமி, அமைரா, ரித்திகா சிங், அடா சர்மா, ஜனனி அய்யர், பாருல் யாதவ், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், அட்லீ, ஆர்.கே.செல்வமணி, வெங்கட் பிரபு , சிபி மலயில், ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், விருது விழாவின் இயக்குனர் ஆண்ட்ரே திம்மன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விருது விவரம் வருமாறு:

சிறந்த படம்: இறுதிச்சுற்று

சிறந்த நடிகர்: மாதவன் (இறுதிச்சுற்று)

சிறந்த நடிகை: ரித்திகா சிங்.(இறுதிச்சுற்று)

இயக்குனர்: அட்லி (தெறி)

துணை நடிகை: பேபி நைனிகா(தெறி)

துணை நடிகர்: நாகார்ஜுனா( தோழா)

இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா).

பாடகர்: அனிருத் (நானும் ரவுடிதான்)

நகைச்சுவை நடிகர்: ஆர்.ஜே.பாலாஜி (நானும் ரவுடிதான்).

வில்லன்: மகேந்திரன் (தெறி).

சவுண்ட் மிக்சிங்: உதய்குமார் (சென்னை 28-2).

எடிட்டர்: கிஷோர் ( விசாரணை).

சிறந்த கதை: கார்த்திக் நரேன் (துருவங்கள் பதினாறு).

பாடலாசிரியர்: அருண்ராஜா காமராஜ் (நெருப்புடா).

பாடகி: நீதிமோகன்

மலையாள விருது விவரம்:

சிறந்த படம்: புலிமுருகன்

சிறந்த நடிகர்: துல்கர் சல்மான் (சார்லி)

சிறந்த நடிகை: ராஜிஷா

இயக்குனர்: மார்டின் பிரக்கத்(சார்லி)

துணை நடிகை: அபர்ணா கோபிநாத்

துணை நடிகர்: விநாயகன்

இசையமைப்பாளர்: கோபிசுந்தர்

பாடகர்: விஜய் யேசுதாஸ்

வாழ்நாள் சாதனையாளர் விருது, இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு வழங்கப்பட்டது. நடிகைகள் கேத்ரின் தெரெசா, ஹன்சிகா, அக்ஷரா ஹாசன், நடிகர் ஜீவா ஆகியோர் நடனமாடினர்.

விழாவில் விருது வாங்கிய ஏ.ஆர்.ரகுமானை பாடச் சொன்னார், நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிவா. ரகுமான், விஜய்ஜேசுதாசை அழைத்து, அவளும் நானும் (அச்சம் என்பது மடமையடா) பாடலைச்பாடச்சொன்னார். இரண்டு வரிகளை பாடிய அவருடன் சேர்ந்து ரகுமானும் பாட, ரசித்தார்கள் ரசிகர்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்