முதல்வராக இருந்து வர்தா புயலை விரட்டி அடித்த பின் தமிழகத்திற்கு எந்த புயலும் வரத் தயங்குவதாக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது பேசிய அவர், “ ஜெயலலிதா இறந்தபோது திவாகரன் என்னிடம் கேட்டார். நீங்கள் தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று சொன்னார். என்னால் ஏற்க முடியாது என்று சொன்னேன். ஏன் என்று திவாகரன் கேட்டார். 16 பேர் இங்கு உள்ளனர் ( தினகரனின் உறவினர்கள்). எல்லோரும் என்னை பகைவனாய் பார்பார்கள் என்றேன். தற்போது வரை தினகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. கட்சியை கைபற்ற தினகரன் நினைத்ததால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே தினகரன் முதல்வராக வேண்டும் என சதி செய்தார். எனவே நான் உயிரோடு இருக்கும் வரை தினகரனை வீட்டிற்குள் விடமாட்டேன் என ஜெயலலிதாவே சொன்னார். தர்மயுத்தத்தின் போது நாங்கள் ஒன்றிணைந்து விடக்கூடாது என அமைச்சர்களை அடிக்க வந்தவர் தினகரன். தினகரனின் அத்தனை முயற்சிகளையும் தவிடு பொடியாக்குவோம். தினகரன் எங்களை துரோகி என்கிறார். அவர் பெரிய தியாக செம்மலல்ல. என்னை அறிமுகம் செய்ததாக அவர் சொல்கிறார். பெரியகுளத்தில் நான் ஜெயலலிதா யுனிவர்சிட்டியில் சேர்ந்தபோது அவர் எல்கேஜி படிக்க வந்தவர்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ வர்தா புயல், ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சனைகளை வைத்து ஜெயலலிதாவின் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க நினைத்தார்கள். நான் முதல்வராக இருந்து வர்தா புயலை விரட்டி அடித்த பின் தமிழகத்திற்கு எந்த புயலும் வரத் தயங்குகிறது. தங்கத்தை உற்பத்தி செய்கின்ற நாடுகளில் கூட தங்கம் இலவசமாக வழங்கப்படவில்லை. தமிழகத்தில் தான் தாலிக்கு இலவசமாக தங்கம் வழங்கப்படுகிறது. ஸ்டாலின் சொல்லுகிறார் எங்களுக்கு முதுகெலும்பு இல்லை என்று. முதுகெலும்பு இருந்ததால் தான் காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளோம்” என ஓபிஎஸ் தெரிவித்தார்.
Loading More post
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!