Published : 31,Aug 2018 02:26 PM
கைலாச யாத்திரை புறப்பட்டார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைலாச யாத்திரை புறப்பட்டுச் சென்றார்.
நாட்டின் நன்மைக்காக சிவபெருமானின் அருளை வேண்டி ராகுல் காந்தி இந்த யாத்திரை செல்வதாக காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 12 முதல் 15 நாள் வரை நீடிக்கும் இப்பயணத்தில் கைலாச மலையை தரிசிப்பதுடன் மானசரோவர் ஏரிக்கும் ராகுல் செல்வார் என சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
எனினும் பாதுகாப்பு கருதி ராகுல் எந்தப் பாதையில் இந்த யாத்திரையை மேற்கொள்வார் எனக் கூற இயலாது என்றும் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி சிறந்த சிவ பக்தர் என்றும் அவரது யாத்திரைக்கு தடை போட பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என்றும் சுர்ஜேவாலா தெரிவித்தார்.