Published : 31,Aug 2018 11:20 AM

கேரளாவிற்கு நீட்டா அம்பானி 50 கோடிக்கு நிவாரணப் பொருட்கள்..!

Nita-Ambani-visits-Flood-Hit-areas-in-Kerala

கனமழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நீட்டா அம்பானி நேரடியாக சென்று நிதியுதவியும், நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.

Read Also -> அமிதாப்பை தமிழுக்கு அழைத்து வந்தது எப்படி?

இடைவிடாமல் பெய்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என கேரளாவை புரட்டிப் போட்டது இயற்கை சீற்றம். தன்னார்வலர்களின் உதவியாலும், பொதுமக்களின் உதவியாலும் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மத்திய அரசோடு பல மாநிலங்களும் கேரளாவிற்கு உதவிக்கரங்கள் நீட்டியுள்ளன. வெள்ளத்திற்கு வீடுகளை பறிகொடுத்த மக்கள் நிவாரண முகாம்களில் உள்ளனர். கேரள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 483 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 140 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Also -> ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள்! 

இந்நிலையில் கேரளாவிற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களை நீட்டா அம்பானி சந்தித்துள்ளார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆலப்புழா மாவட்டத்தின் பலிபாட் கிராமத்திற்கு சென்ற அவர் 50 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பில் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, 21 கோடி ரூபாயை கேரள வெள்ள நிவாரண நிதிக்காவும் வழங்கினார். நெருக்கடியான இந்நேரத்தில் கேரள மக்களுக்கு ரிலையன்ஸ் பவுண்டேஷன் துணை நிற்கும் என்றும் நீட்டா அம்பானி கூறியுள்ளார்.  இதுதவிர ரிலையன்ஸ் பவுண்டேஷனை சேர்ந்த 30 பேர் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் மீட்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த சுஹாசினி, குஷ்பு ரூபாய் 40 லட்சம் வழங்கியுள்னர். 1980-களில் பிரபலமாக இருந்த நடிகைகள் அடிக்கடி கூட்டாக சந்தித்து தங்களின் இன்ப, துன்பங்களை பகிர்வது வழக்கமாகும். அந்தவகையில் தற்போதும் கேரள வெள்ளத்தையொட்டி அவர்கள் ஒன்றாக சந்தித்து பேசி ரூபாய் 40 லட்சம் கேரளாவிற்கு வழங்கியுள்ளனர். இந்த நிதியை சுஹாசினி கேரள முதலமைச்சரிடம் நேரடியாக வழங்கியுள்ளார்.

இதேபோல கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ரூபாய் 15 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்