ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவிற்கு எதிரான தொடரில் சில சமயங்களில் தனது உணர்வுகள் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.
நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு பேசுகையில் இதனை ஸ்மித் தெரிவித்தார். இந்திய - ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த டெஸ்ட் போட்டியின் போது பல சர்ச்சைகள் உருவெடுத்தன.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்யும் போது டிஆர்எஸ் முறை மூலம் அப்பீல் செய்ய பெவிலியனில் இருந்த வீரர்களின் உதவியை ஸ்மித் நாடியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இதன் பிறகு, டிஆர்எஸ் முறையில் ஆஸ்திரேலியர்கள் ஏமாற்றுவது தொடர்ந்து வருவதாக விராட் கோலி கூறினார்.
நான்காவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான விஜயை ஸ்டீவ் ஸ்மித் தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ வைரலாகியது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மித், தான் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுள்வதாகத் தெரிவித்தார்.
Loading More post
'வெளியேறுங்கள் அல்லது சாக தயாராகுங்கள்' -காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?