[X] Close

80 ஆண்டுகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பேராலயம்

A-Church-was-Renewed-without-his-old-age

கும்பகோணம் நகரின் முக்கிய அடையா‌ளமாக அமைந்துள்ள 2 ஆயிரம் வருட பாரம்பரிய கலைப் பொக்கிஷங்களைத் தாங்கி நிற்கும் தூய அலங்கார அன்னை பேராலாயம் புனரமைக்கப்பட்டுள்ளது. 


Advertisement

கும்பகோணம் ரயில் நிலையம் அருகில் ஓங்கி வானுயர்ந்து காட்சி அளிக்கும் தூய அலங்கார அன்னை பேராலயம் 1930 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1936 ஆம் ஆண்டு வழிபாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆலயத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. ஐரோப்பிய கோத்திக் கலை, ரோமானிய கட்டடக்கலையான RIBBED VAULT எனப்படும் விலா எலும்பு வளைவுகள், மற்றும் பிரெஞ்ச் கட்டடக்கலையான FRENCH VAULT எனப்படும் வளை கூரை, அரேபியக் கட்டடக் கலையான POINTED ARCH எனப்படும் நுண் கூம்பு வளை கூரை, FLYING BUTTRESS எனப்படும் பறக்கும் சுவர் முட்டுகள் ஆகிய கட்டடக் கலைகளைக் கொண்டு மிக நேர்த்தியாக இந்தத் தூய அலங்கார அன்னை பேராலாயம் புனரமைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் வளர்த்தெடுக்கப்பட்ட கட்டடக் கலையுடன் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் இந்தப் பேராலயத்தை ஏராளமானோர் ஆர்வத்துடனும், பிரமிப்புடனும் பார்த்துச் செல்கிறார்கள்.


Advertisement

 


 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close