Published : 30,Aug 2018 01:40 PM

குளுகுளு சிம்லாவில் ராயல் என்ஃபீல்டில் வலம் வரும் தோனி

MS-Dhoni-Enjoys-a-Bike-Ride-While-Shooting-With-the-Stars-in-Shimla

இந்தியா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி, இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்றார். பின் இந்தியா திரும்பிய அவர், தனது ஜார்க்கண்டில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. அதில் பங்கேற்பதற்காக விரைவில் பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார். 

இதற்கிடையே, விளம்பர படப்பிடிப்புக்காக தோனி சிம்லா சென்றுள்ளர். ஏற்கனவே சிம்லாவில் ரசிகர்களுடன் தோனி உரையாடுவது போன்ற படங்கள் வெளியாகி இருந்தன. அதேபோல், தற்போது தோனி ராயல் என்ஃபீல்டில் வலம் வரும் படங்களும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தோனியின் மனைவி ஷாக்சியும் தனது இன்ஸ்டாகிராமில் தோனி பைக்கில் செல்வது போன்ற வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

                                    

தோனி பைக் ரைடில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரியும். கிரிக்கெட் விளையாட செல்லும் இடங்களில் கூட இரவு நேரங்களில் தோனி அடிக்கடி பைக் ரைட் செல்வார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்