Published : 29,Aug 2018 04:44 PM
வெண்கலம் வென்ற வீரர்களுக்கு தலா 20 லட்சம்: முதல்வர் பழனிசாமி

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் 3 பேருக்கு தலா 20 லட்சம் ரூபாய் ஊக்க தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேசைப்பந்து ஆடவர் குழுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள தமிழக விளையாட்டு வீரர்கள் சரத் கமல், அமல்ராஜ், சத்தியன் ஆகியோருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு அறிவித்ததன்படி, இம்மூன்று பேருக்கும் தலா 20 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, அவர்களின் எதிர்கால வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.